உலர்ந்த தலைமுடி உள்ளவர்கள் அதிகமாக ஷாம்பு போட்டு குளித்தால், தலைமுடி மேலும் உலரச் செய்யும். எனவே, வாரத்தில் 2-3 முறை ஷாம்பு குளியல் எடுக்கலாம். எண்ணெய் தலைமுடி உள்ளவர்கள் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஷாம்பு போட்டு குளிக்கலாம். தலைமுடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்னைகள் இருந்தால், ஒரு வாரத்தில் அதிகமாக ஷாம்பு போட்டு குளிக்கும் எண்ணிக்கையை மாற்ற வேண்டி இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.