சென்னை ரெட்ஹில்ஸ்-ஐ சேர்ந்தவர் விஜய் (25). இவர் திருச்சி திருவெறும்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டு தங்கி வேலை பார்த்தார். அப்போது ஒரு சிறுமியை அவர் கர்ப்பமாக்கியுள்ளார். புகாரின்பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு விஜய் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், போலீசார் சென்னையில் தேடுதல் வேட்டை நடத்தி, 1 வருடமாக தலைமறைவாக இருந்த விஜயை நேற்று கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.