அதிமுக முக்கிய நிர்வாகி உள்பட 200 பேர் திமுகவில் இணைந்தனர்

83பார்த்தது
அதிமுக முக்கிய நிர்வாகி உள்பட 200 பேர் திமுகவில் இணைந்தனர்
அதிமுகவின் திருப்பூர் மேற்கு மாவட்டம் வெள்ளகோவில் நகர துணை செயலாளர் வைகை கே.மணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன், ஐடி விங் நிர்வாகி சிட்டி ஜி.பிரபு உள்பட சுமார் 200 பேர் திமுகவில் இணைந்தனர். முன்னதாக, அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம், லட்சுமணன் ஆகியோருக்கு சமீபத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து, பல்வேறு கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி