ஈரோடு அருகே இன்ஸ்டா பிரபலம் ராகுல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது சென்டர் மீடியாவில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அவரது உடலை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அவரது குடும்பத்தினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.