சென்னை: கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான அதிகபட்ச வரியாக சிலிமனைட் கனிமம் டன் ஒன்றுக்கு ரூ.7,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்ச வரியாக களிமண் கனிமத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ.40ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரியால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,400 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.