ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் (e-KYC) பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31க்கு பிறகு இலவச அரிசி ரத்து செய்யப்படவுள்ளது. அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க விரல் ரேகையை பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் இன்னும் 76 லட்சம் பேர் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்களுக்கு மார்ச்சுக்கு பின் இலவச அரிசி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.