பாசிப்பருப்பு - 250 கிராம், வெந்தயம் - 150 கிராம், 2 கைப்பிடி அளவு கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரத்தில் தலா 1 ஸ்பூன் அளவு எடுத்து தேங்காய்ப்பால் கலந்து தலைக்கு தேய்த்து ஹேர்பேக் போல பயன்படுத்தலாம். 10-20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிக்கலாம். வாரம் ஒருமுறை இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.