கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எப்போதும் நீல வண்ணத்தில் காட்சி அளிக்கும் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு வண்ணத்தில் அலைகளுடன் அதிகமாக காட்சியளிக்கிறது. கடற்கரை பகுதிகளில் கருப்பு நிறங்கள் படிந்த மணல்கள் ஆங்காங்கே கரை ஓரத்தில் ஒதுங்கி உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதால் ஒரு வாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.