உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ், டிங் லிரென் இடையிலான 7-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என 3 புள்ளிகள் பெற்ற நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்று ஆட்டத்தில் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. ஆட்டம் சுமார் 5 மணி நேரம் நீடித்ததையடுத்து, போட்டி சமனில் முடிந்தது.