தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தைக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஹைதராபாத்திற்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் இடையிலேயே குழந்தைக்கு மூச்சு நின்றுவிட்டது. உடனே சுதாரித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைக்கு சிபிஆர் சிகிச்சை செய்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளனர்.