டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவில், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா இருவரும் பங்கேற்கின்றனர். US சென்றுள்ள இருவரும், இன்று தொடங்கும் வரவேற்பு விழாவில் இருந்து கேண்டில் லைட் டின்னர் வரை, முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்வார்கள். இந்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். 47-வது அதிபராக டிரம்ப் ஜன.20-ம் தேதி பதவியேற்கவுள்ளார்.