இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் தண்ணீரில் இசையை பல்வேறு விதமாக இசைத்து ஆச்சரியப்படுத்துகிறார். மேடையில் வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் அந்த இசையை அவர் உருவாக்குகிறார். ஒவ்வொரு பொருளை வைத்தும், அந்த பொருளை தண்ணீரில் பயன்படுத்தியும் அந்தப்பெண் இசையை வெவ்வேறு விதமாக உருவாக்குகிறார். அந்த வீடியோவை பார்க்கும் பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் அமர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.