கேரள மாநிலத்தின் கண்ணூரில் உள்ள மருந்தகம் ஒன்றில் இளம் தாயார் தனது குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றபடி மருந்து வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை லாவகமாக திருடி சென்றனர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில் குற்றவாளிகளை போலீஸ் தேடுகிறது.