சிவகங்கை: பெரியநரிக்கோட்டையில் பெந்தகோஸ்தே சபை உள்ளது. இங்கு இறைபணி ஊழியராக மகேஷ் உள்ளார். இந்த சர்ச்சிற்கு 34 வயது பெண் அடிக்கடி வந்தார். பாவ மன்னிப்பு கேட்க வந்த அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய மகேஷ் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமாகி குழந்தை பெற்ற அப்பெண்ணை மணப்பதற்கு மகேஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரில் போலீசார் மகேஷை கைது செய்தனர்.