கனடாவின் புதிய அமைச்சரவையில் தமிழ் வம்சாவளி பெண்

80பார்த்தது
கனடாவின் புதிய அமைச்சரவையில் தமிழ் வம்சாவளி பெண்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அனிதா ஆனந்த் (58) கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தனது பெற்றோர் தொடர்பிலும், தமிழ் தொடர்பிலும் அனிதா பழைய மகிழ்ச்சியான நினைவுகள் குறித்து பலமுறை பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி