தமிழ்ப்புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து சென்னை முகாம் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் புதுமைப் பெண் மற்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் உறுப்பினர்கள், துணை முதலமைச்சரை சந்தித்தனர்.