பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் (வீடியோ)

1092பார்த்தது
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் செய்தார். நடத்துனரிடம் டிக்கெட் பெற்று அதனை கை பையில் வைக்கும் போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து வெளியே தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி