ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில், பெண் ஒருவர் பைக்கில் தனது குழந்தையுடன் ஆபத்தான முறையில் பயணித்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்கூட்டரில் சென்ற அந்த பெண், தனது குழந்தையை பைக் சீட்டில் நிற்கவைத்தபடி வேகமாக சென்றுகொண்டிருக்கிறார். பார்ப்பதற்கே பதறவைக்கும் வகையில் உள்ள இந்த சம்பவத்தில், குழந்தை கீழே விழுந்திருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.