பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகி துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்பிரீத் தங்கியிருந்த அறையில் இருந்து நேற்று (ஜன. 10) நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய குர்பிரீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்தார். அவர் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். போலீஸ் விசாரிக்கிறது