மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில்நாதன். இவர் நர்சிங் பயிற்சி பெற்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் செந்தில்நாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.