பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரிக்கு வரும் 16, 17ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி வரும் 16, 17ஆம் தேதிகள் உழவர் திருநாளுடன் பொங்கலை கொண்டாட விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.