தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான இணைய சேவையை BSNL வழங்கி வருகிறது. ஆனால் BSNL-க்கு ரூ.1.5 கோடி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இணைய சேவை விரைவில் துண்டிக்கப்படும் என செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசு சுமார் ரூ.2,100 கோடியை தராவிட்டாலும் மாநில அரசு சொந்த பணத்தை செலவு செய்து வருவதாக கூறினார்.