பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் காட்டு தீ

83பார்த்தது
பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் காட்டு தீ
சென்னை சோழிங்கநல்லூர் ஆவின் பின்புறம் உள்ள பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் இன்று (மே 30) இரவு திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அதிக வெயில் காரணமாக தீப்பிடித்ததா அல்லது உயர் அழுத்த மின் கம்பி உரசி தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி