நீர்மட்டம் உயர்வு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

66பார்த்தது
நீர்மட்டம் உயர்வு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழ்நாட்டில் சமீப காலமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. அந்த வகையில் தற்போது மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நீர்வளத்துறை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.