“இந்து - இஸ்லாமியர் திருமணம் செல்லாது” - நீதிமன்றம் தீர்ப்பு

56பார்த்தது
“இந்து - இஸ்லாமியர் திருமணம் செல்லாது” - நீதிமன்றம் தீர்ப்பு
சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் இந்து, இஸ்லாமியர் இடையே நடக்கும் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் (ஷரியத்) கீழ் செல்லாது என மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமியத்தைச் சேர்ந்த ஆணுக்கும், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கலப்பு திருமணத்தை பதிவு செய்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு குறித்த விசாரணை இன்று (மே 30) நடைபெற்றது. அப்போது, இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், முஸ்லீம் சட்டத்தின் கீழ் இது ‘ஒழுங்கற்ற’ திருமணமாக கருதப்படும் என கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி