மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகைக்காக மனைவி தனது மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபுராவ் பாட்டீல் (56), வனிதா பாட்டீல் தம்பதியினருக்கு தேஜஸ் பாட்டீல் என்ற மகன் உள்ளார். பாபுராவ் பாட்டீல் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது. அந்த பணத்திற்காக தாயும், மகனும் பாபுராவ் பாட்டீலை கொன்றுள்ளனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், விசாரணை நடத்தினர். அதில், மனைவியும், மகனும் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.