திமுக கூட்டணியில் உள்ள கொமதேக தலைவர் ஈஸ்வரன் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியுள்ளார். இபிஎஸ் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும், 4 ஆண்டுகள் அவர் நல்லாட்சி செய்ததாகவும் பேசியுள்ளதால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக சின்னத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கும் ஈஸ்வரன், தற்போது அதிமுக ஆதரவு வளையத்திற்குள் வந்துள்ளாரோ? என்ற சந்தேகம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் நீடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.