வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்? காங்கிரஸ்

63பார்த்தது
வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்? காங்கிரஸ்
மக்களவை தேர்தல் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்த 30% தொகுதிகளில், 2019 தேர்தலை ஒப்பிடும் போது வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. "உதாரணமாக, 2009ம் ஆண்டில், மகாராஷ்டிராவின் வர்தா தொகுதியில் 8 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். 2014ம் ஆண்டு 10 லட்சம் வாக்காளர்களும், 2019ம் ஆண்டு 10.7 லட்சம் வாக்காளர்களும் இருந்தனர். ஆனால், 2024ம் ஆண்டில் இது 10.5 லட்சமாக குறைந்துள்ளது. 2019 தேர்தலை ஒப்பிடும்போது 2024ம் ஆண்டில் பல தொகுதிகளில் வாக்காளர்கள் குறைந்து வருவது ஏன்? என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி