சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மே 24) வழிபாடு செய்தார். திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு வைகாசி மாத அனுஷம் நட்சத்திர வழிபாடு செய்தார். வெள்ளை வேட்டி சட்டையில் கோயிலுக்குச் சென்ற ஆளுநர் ரவி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்துள்ளார். மேலும், திருவள்ளுவர் பிறந்த நாளை திருநாளாக ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படம் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.