தமிழக வெற்றிக் கழகம் முக்கிய அறிவிப்பு

57பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்திக்கும் விழா ஜூன் 15 - 20ம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களை விரைவில் சந்திப்பேன் என நடிகர் விஜய் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி