பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நாதக சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழித்ததையடுத்து அவரது வீட்டு காவலாளி குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து கொல்கத்தாவில் தயாரான துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உரிமம் பெற்ற துப்பாக்கியை தான் காவலாளி அமல்ராஜ் பயன்படுத்தி வந்துள்ளார் எனவும், துப்பாக்கி மற்றும் 20 புல்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.