எதிரியின் தொலைத்தொடர்பு வட்டத்தை முடக்கும் ஜாமர் கருவிகள், எதிரி இலக்கை எச்சரிக்கும் ரேடார் சாதனம் போன்ற கருவிகள் இதில் நிறுவப்பட்டுள்ளன. வானில் பயணம் செய்யும்பொழுது எரிபொருள் தீர்ந்தால் மற்றொரு ஜெட் விமானத்தில் வந்து எரிபொருள் நிரப்பும் வசதியும், 2000 லி எரிபொருள் கொள்ளளவும், வானில் 350 கி.மீ அளவுக்கு நடமாட்டங்களை கண்காணிக்கும் திறனும் கொண்டது. விமானிக்கு ஏதேனும் இருந்தால் தானாக படைத்தளத்திற்கு திரும்பும் வசதியும் உள்ளது.