பேபி ஜான் படத்தின் ப்ரமோஷன் விழாக்களில் அட்லீ, கீர்த்தி சுரேஷ், பிரியா, வருண் தவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அட்லீ தனது மனைவி பிரியாவையும் கீர்த்தி சுரேஷையும் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனை பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ் "என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க?" என கேட்பது போல் அமைந்துள்ளது.