மருத்துவ ஆய்வுகளுக்கு பொதுவாக எலிகள் தான் பயன்படுத்தப்படும். இதற்கு முக்கிய காரணம், அவை மனிதர்களுடன் மரபணு ரீதியிலும், உடல் அமைப்பிலும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன, மேலும் மனிதர்களுக்கும் எலிகளுக்கும் பல பொதுவான நோய்கள் ஏற்படுவதால் எலிகளை வைத்து மனித நோய்களுக்கான மாதிரிகளை உருவாக்க முடிகிறது. இதோடு நல்ல நினைவுத்திறன் கொண்ட உயிரினமாக எலிகள் இருப்பதால் அவை ஆய்விற்குப் பயன்படுத்தப்படுகின்றன.