குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி வழக்கு - உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை கோரிய இடையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி 20 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த இடையீட்டு மனுக்களுக்கு பதில் அளிக்க அவகாசம் தேவை என மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரியுள்ளார். அப்படி என்றால் புதிய சட்டத்தின் கீழ் யாருக்கும் குடியுரிமை வழங்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளிக்கட்டும் என மனுதாரர் தரப்பு கூறியுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்த 236 மனுக்களில் எத்தனை மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளோம்? தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.