பாஜக பிரதமர் வேட்பாளர் யார்? அரவிந்த் கெஜ்ரிவால்

67பார்த்தது
பாஜக பிரதமர் வேட்பாளர் யார்? அரவிந்த் கெஜ்ரிவால்
சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி இருக்க மோடி 75 வயதை அடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறது பாஜக? அமித்ஷாவைப் பிரதமர் ஆக்க ஓட்டு கேட்கிறார்களா? இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி