1980களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் தற்போதுதான் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஆனால், 1980-களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் இந்தியாவின் முடிவில் மாற்றம் இல்லை" என கூறியுள்ளார்.