தமிழகத்தில் பணக்கார மாவட்டமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள அரசு பணிகளில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். வெளிநாடுகளில் அதிக அளவில் வேலை பார்ப்பதும் இந்த ஊர் மக்கள்தான். ஏற்றுமதி, மீன்வளம், விவசாயம், சுற்றுலா என அனைத்திலும் முதன்மை மாவட்டமாக இருக்கிறது. தனிநபர் வருமானம், மனித வளர்ச்சிக் குறியீடு, எழுத்தறிவு விகிதம், கல்வியின் அடிப்படையில் கன்னியாகுமரி முதன்மை மாவட்டமாக விளங்கி வருகிறது.