சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ, அதிகரிப்போ, செயற்கையாக உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன் என்று நறுக்கென்று கூறியுள்ளார். மேலும் அவர், " 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ் என எங்கள் 4 பேருக்கான விருது" என்று தெரிவித்துள்ளார்.