MMTC-PAMP நிறுவனம் இந்திய அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் தங்க விற்பனை தளமாகும். இந்த தளத்தின் மூலமாக டிஜிட்டல் தங்கம் வாங்கும்பொழுது 100% காப்பீட்டுடன், பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்க முடியும். மோசடி நடைபெறாது. திருட்டு பயமும் இல்லை. மேலும் Augmont, SafeGold போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்தும், போன் பே, கூகுள் பே, பேடிஎம் அமேசான் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை ஆப்-களை பயன்படுத்தியும் டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும்.