"மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?”

85பார்த்தது
"மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?”
மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “நாளை முதல் வரும் 14ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா, G7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும், அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?” என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி