'வடசென்னை 2' எப்போது வரும்? வெற்றிமாறன் பதில்

151பார்த்தது
'வடசென்னை 2' எப்போது வரும்? வெற்றிமாறன் பதில்
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. நடிகர்கள் தனுஷ், அமீர், சமுத்திரகனி, ராதாரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து வெற்றிமாறன் தற்போது தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும், அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்றார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி