கன்னியாகுமரியில் மாவட்டத்தின் ஒரே அமைச்சர் மனோ தங்கராஜ். அவருக்கு மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமான சூழல் இல்லை என்பதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் செஞ்சி மஸ்தானுக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் இடையே ஏற்பட்ட மோதலே அவர் பதவி நீக்கத்திற்கான காரணம் என்றும், அமைச்சர் கா. ராமச்சந்திரன் துறையின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இணக்கமாக பணியாற்றவில்லை என்பதால் அவர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.