“நம்ம சின்னத்தை விட வேற எது பிரபலம்?” - இபிஎஸ் கேள்வி

73பார்த்தது
“நம்ம சின்னத்தை விட வேற எது பிரபலம்?” - இபிஎஸ் கேள்வி
சென்னையில் இன்று (ஜூலை 24) தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோனை நடத்தினார். அப்போது தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் போன்ற பிரபலங்கள் போட்டியிட்டதால் அதிமுக டெபாசிட் இழந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் கடுப்பான இபிஎஸ், “தேனி தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொடுத்தும், டெபாசிட் இழந்துள்ளோம். தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் போன்றவர்கள் பிரபலங்களா?. இரட்டை இலையே நம்ம பக்கம் இருக்கும் போது யார் பிரபலம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி