பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றத்தின் வெளிப்புற விளைவே நிலநடுக்கம் ஆகும். பூமியின் மேல் தட்டில் அமைந்துள்ள பாறைகள் தொடும் பாறை அமைப்புகளைக் கொண்டது. இது புறணி என்று அழைக்கப்படுகிறது. உறுதியற்ற இடத்தில் விரிசல் பகுதியில் நகர்வுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக உட்புற பாறைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. இதனால் மேல்ப்புற பாறைகள் அதிர்வை உணர்கின்றன. இதுவே நிலநடுக்கம் எனப்படுகிறது.