அண்ணா பல்கலை.பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு சோதனை நடத்தி வருகின்றனர். கோட்டூரில் உள்ள ஞானசேகரன் வீட்டில் இன்று (ஜன.04) காலை முதல் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், சம்பவத்தின் போது ஞானசேகரன் அணிந்திருந்த தொப்பியை அவரது வீட்டிலிருந்து கைப்பற்றியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.