சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான "நீராரும் கடலுடுத்த.." பாடல் பாடப்படாமல், புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான பாரதிதாசன் இயற்றிய "வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே.." என்ற பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.