உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோயிலாக இராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோயில் உள்ளது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது. இங்குள்ள இறைவன் 'மங்களநாதர்' என்றும், இறைவி 'மங்கள நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது.