விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கைதான ஆசிரியர் ஏஞ்சலுக்கு வருகிற ஜன.10ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, யுகேஜி வகுப்பு ஆசிரியை ஏஞ்சல், தாளாளர் எமால்டா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.