சீனாவில் புதிதாக பரவிவரும் HMPV வைரஸுக்கும் கொரொனா வைரஸுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே சுவாச மண்டலத்தை பாதித்து, லேசானது முதல் தீவிர தொற்றை ஏற்படுத்தும். காற்றில் பரவும். காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், வீஸிங், மூச்சுத்திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகள். ஆகும். குழந்தைகள், முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகம் தாக்கும். மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்றவை நோய் பரவலை தடுக்கும் முறைகளாகும்.